இலங்கை ராணுவத்திலிருந்து விலகிய வீரர்களுக்கு பொது மன்னிப்பு.! - Seithipunal
Seithipunal


இலங்கையில் முறையான நடவடிக்கையை பின்பற்றாமல் சட்ட விரோதமாக மற்றும் தப்பி ஓடிய ராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, உள்நாட்டு போர், ஊதிய விவகாரம் மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக முப்படையில் உள்ள கிட்டத்தட்ட 20000 ராணுவ வீரர்கள் பணியிலிருந்து தப்பி ஓடி நீண்ட காலமாக வேலைக்கு திரும்பாமல் இருந்தனர்.

இந்நிலையில் வேலைக்கு திரும்பாமல் இருந்த அனைவரையும் பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் பணி பட்டியலிலிருந்து முறையாக நீக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் நளின் ஹெராத் தெரிவித்துள்ளார். இந்த பொது மன்னிப்பு திட்டம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை 17,322 போ் ராணுவத்திலும், 1,145 போ் கடற்படையிலும், 1,038 போ் விமானப் படையிலும் இருந்து விலகி நீண்ட காலமாக வேலைக்கு திரும்பாமல் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

General amnesty for soldiers who left the Sri Lanka Army


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->