எலான் மஸ்க்கின் கருத்துக்கு, கண்டனம் தெரிவித்த ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோலஸ்..!
German President Olaf Scholz condemned Elon Musks comments
ஜெர்மனி அதிபர் ஸ்கால்ப் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். 'ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. அதற்காக, தீவிர வலதுசாரியை ஆதரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது,'' என, அவர் கூறியுள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ், கடந்த 2021-இல் நடந்த தேர்தலில் அவரது கூட்டணி, ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது.
பின்னர் நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, பிப்ரவரியில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க், ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். ஜெர்மனி அதிபரான ஸ்கூல்சை திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் மஸ்க் குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற பிறகு ஓலப் ஸ்கோலஸ் கூறியதாவது: ஐரோப்பாவில், குறிப்பாக ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் உள்ளது. கோடீஸ்வரர் ஆக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் சரி, விரும்பியதை பேசலாம். ஆனால், தீவிர வலதுசாரிகளை ஆதரிப்பது என்றால், அதனை ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்
English Summary
German President Olaf Scholz condemned Elon Musks comments