ஒரே வாரத்தில் மூன்றாவது முறை அதிகரித்த உலகின் சராசரி வெப்பநிலை- எச்சரிக்கும் வல்லுநர்கள்!! - Seithipunal
Seithipunal


உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது.

ஆனால், அதை மிஞ்சும் வகையில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸாக சராசரி வெப்பநிலை பதிவானது. அதனை தொடர்ந்து ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸாக (62.9 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது. தொடர்ந்து ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் (62.9 டிகிரி பாரன்ஹீட்) என்று பதிவானதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை 3ம் தேதி உலகின் வெப்பம் புதிய உச்சம் தொட்டபோது,  லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ, "இந்த வெப்பநிலையை ஏதோ ஒரு மைல்கல் என சாதாரணமாக நினைக்க வேண்டாம். இது நாம் கொண்டாட வேண்டிய விஷயம் அல்ல.

உண்மையில் இது மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்குமான மரண ஒலி என்பதை புரிந்துகொள்ளுங்கள் என கூறியிருந்தார்.  உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக அதிகரித்துள்ளது ஆபாத்தான விஷயம் என்று வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Global average temperature rises for third time in one week Experts warn


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->