திடீரென இடிந்த தங்க சுரங்கம்: பரிதாபமாக உயிரிழந்த தொழிலார்கள்!
gold mine suddenly collapsed workers died
தென் ஆப்பிரிக்கா சுரினேம் நாட்டில் சட்டவிரோதமாக தோண்டப்பட்ட தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 10 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், ராணுவ அதிகாரிகள் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சுரங்கம் சுரினேமின் தெற்கு மாகாணத்தில் உள்ள கிராம பகுதிகள் உள்ளது. இந்த சுரங்கத்தில் தங்கம் எடுப்பதற்காக அங்கிருந்தவர்கள் சிலர் தோண்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கம் இடிந்து விழுந்ததற்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. இது தொடர்பாக உறுதியற்ற பல விஷயங்கள் இருப்பதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது முக்கியமானது எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க மாற்றும் கன்னட நாட்டின் நிறுவனங்கள் சுரினேம் நாட்டில் தங்க சுரங்கம் அமைக்க மிகப்பெரிய அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக சுரங்கம் தோன்றும் பணி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
gold mine suddenly collapsed workers died