சவூதி அரேபியாவில் மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
Heavy rain again in Saudi Arabia
சவுதி அரேபியாவில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அத்துடன், சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அங்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலைவன நிலப்பரப்பை கொண்டசவூதி அரேபியாவில், மழைப்பொழிவு என்பது அப்போ அப்போ நடைபெறும் ஓர் அறிய நிகழ்வு. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நாட்டில் மழை தொடர்ந்து பெய்கிறது. அந்த நாட்டின் முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.
சவூதி அரேபியாவை பொறுத்தவரை ஒரு ஆண்டுக்கு சராசரி மழை அளவு 10 சென்டிமீட்டர் மழை தான் சராசரியாக பெய்யும். ஆனால் இரண்டு நாட்களில் சவுதியில் 4.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. அதேபோல் ஜெட்டா நகரில் 3.8 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த மழையின் காரணமாக அங்குள்ள பல சாலைகள் மற்றும் சதுக்கங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.மழை வெள்ளத்தால் சாலைகள் மற்றும் வீட்டின் அருகே நிறுத்தப்பட்டு இருந்த கார்கள் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
மேலும், சவூதி அரேபியாவின் கிழக்கு நகரங்களான அல் அஹ்ஸா, வின் ஜுபைல், அல் கோபார், தம்மாம் மற்றும் கதீப் ஆகியவை பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும், முக்கிய இடங்களான மெக்கா பகுதியும் மதீனாவும் இன்று கனமழையால் பாதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது
English Summary
Heavy rain again in Saudi Arabia