ஏமனின் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்.!
Houthi rebels drone attack on Yemens Greece oil tanker
ஏமனில் கிரீஸ் எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளியர்சியாளர்கள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு, முதல் அதிபர் ஆதரவு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது.
இந்நிலையில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள ஆஷ் சிஹர் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த கிரீஸ் நாட்டின் ஒக்கியாநிஸ் எகோ டேங்கர்ஸ் கர்ப்பரேஷனின் நிசோஸ் கீ என்ற எண்ணெய் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்களை நடத்தி உள்ளனர்.
ஆனால் இந்த டிரோன் தாக்குதலில் தங்கள் கப்பலுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை என்று கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலை இங்கிலாந்து கடற்படையும், அமெரிக்க கடற்படையின் மத்திய கிழக்கு 5-வது பிரிவும் உறுதி செய்தது.
ஆனால் இந்த தாக்குதல், எச்சரிக்கை தாக்குதல் என்றும், அரசு படைகள் எண்ணெய் ஏற்றுமதிக்கு பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகதான் கிரீஸ் எண்ணெய் கப்பலை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Houthi rebels drone attack on Yemens Greece oil tanker