ஜனநாயக சமூகத்தில் அளிக்கப்படும் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் - Seithipunal
Seithipunal


தென்மேற்கு பசிபிக் நாடுகளான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதலில் நியூசிலாந்து சென்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னை சந்தித்த பின்னர் வெலிங்டனில் கட்டப்பட்ட இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலியா சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர், தலைநகர் கான்பெராவில் நடைபெற்ற 13வது வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டமைப்பு உரையாடலில் பங்கேற்றார். இந்நிலையில் கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

அப்போது கனடாவில் செயல்படும் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் ஜனநாயக சமூகத்தில் அளிக்கப்படும் சுதந்திரங்கள், தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்றும், இது போன்ற குழுக்கள் உண்மையில் வன்முறை மற்றும் மதவெறியை ஆதரிக்கின்றன என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனநாயகம் உள்நாட்டில் மட்டும் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றில்லாமல், வெளிநாடுகளிலும் ஜனநாயகம் எப்படி செயல்பட வேண்டும் என்பதையும், மற்ற ஜனநாயக நாடுகளுக்கு ஜனநாயகம் செய்ய வேண்டிய பொறுப்புகளை நாம் உன்மையாக புரிந்து கொள்ள வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India foreign affairs minister says Freedom in Canada misused


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->