ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து.! - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் உடல்நிலை குறைவால் நேற்று உயிரிழந்தார். அதிபரின் மறைவிற்கு பல்வேறு நாட்டு தலைவர்களும், அதிபர்களும், தொழிலதிபர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து அதிபரின் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் நீண்டநாள் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபரான ஷேக் முகமது பின் சயீத் நல் நஹ்யான் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இந்த வாழ்த்து குறிப்பில், அவரது ஆற்றல்மிக்க மற்றும் தொலைநோக்கு தலைமையின் கீழ், இந்திய-அமீரக உறவு தொடர்ந்து ஆழமடையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India pm modi congratulated UAE new president


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->