நிலநடுக்கத்தால் உருக்குலைந்த துருக்கி.! கள மருத்துவமனையை அமைத்தது இந்தியா.! - Seithipunal
Seithipunal


துருக்கி-சிரியா எல்லை நகரங்களில் கடந்த வாரம் 6ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. பல்லாயிரக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதில் சிரியா மற்றும் துருக்கியில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது. 80 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் துருக்கியின் ஹடாய் பகுதியில் நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த மக்களுக்கு உதவுவதற்காக கள மருத்துவமனையை இந்திய ராணுவம் அமைத்துள்ளது. இந்த 60 பாரா பீல்டு மருத்துவமனை ஆறு மணி நேரத்திற்குள் வணிக வளாகத்தை மாறுதல் செய்து உடனடியாக அமைக்கப்பட்டது. இந்த மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவமனை அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 800-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சையும், 10 பேருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற துருக்கி மக்கள் இந்திய ராணுவத்திற்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian army setup para field hospital in Turkey


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->