அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - வெள்ளை மாளிகையில் பறக்கும் இந்திய கொடி.!
indian flag flies in outside of america white house for pm modi visit
அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி - வெள்ளை மாளிகையில் பறக்கும் இந்திய கொடி.!
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24-ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.
அங்கு ஜூன் 22-ஆம் தேதி 7,000 இந்திய அமெரிக்கர்கள் முன்னிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அமெரிக்க முதல் பெண்மணியும் அவர் மனைவியுமான ஜில் பைடன் முன்னிலையில் வழங்கப்படும் வரவேற்பை ஏற்கிறார்.
அதன் பின்னர் அமெரிக்க பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு அமர்வில் உரை நிகழ்த்தவுள்ளார். பிரதமர் மோடியின் வருகையை தாங்கள் மிகவும் ஆவலோடு எதிர்நோக்கியுள்ளோம் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு சபையின் செய்தி தொடர்புக்கான மேற்பார்வையாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகை அருகே அமெரிக்க கொடியுடன், இந்திய கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
English Summary
indian flag flies in outside of america white house for pm modi visit