அமெரிக்கா : அழகிப்போட்டியில் பட்டம் பெற்ற தமிழ்நாட்டு பெண்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர் அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி நகரில் நடைபெற்ற திருமதி உலக அழகி போட்டியில் கலந்து கொண்டார். 

அந்த போட்டியில் பங்கேற்ற அவர் 'சர்வதேச மக்களின் தேர்வு' என்ற அழகி பட்டத்தை பெற்றார். இந்த வெற்றியின் மூலம், அடுத்த முறை நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. 

இதுமட்டுமின்றி மன நல சிகிச்சை நிபுணர், பெண் தொழில்முனைவாளர், எழுத்தாளர், யோகா பயிற்சியாளர் என்று பல துறைகளில் திறமை கொண்டவர்.

இதேபோல், கடந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற 'திருமதி இன்டர்நேஷனல் வேர்ல்டு கிளாசிக்' என்ற அழகி போட்டியில் பட்டம் வென்றவர். இவர் பல்வேறு சமூக சேவைப் பணிகளிலும் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian girl win beauty award in USA


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->