பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவிய இந்தியா.! - Seithipunal
Seithipunal


கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள், எரி பொருள்கள் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் எட்டு மணி நேரத்திற்கு மேலாக இலங்கையில் மின்வெட்டு செய்யப்படுவதால் பொது மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36 ஆயிரம் மெட்ரிக் டன் பெட்ரோல் மற்றும் 40 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கியுள்ளதாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சரக்கு கப்பல் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர்  எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருளை வழங்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, தனது நாட்டுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்வதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா எங்களுக்கு மூத்த சகோதர இருந்து உதவி வருகிறது. இலங்கைக்கு பணம் கொடுப்பதை விட நிலைமை அவர்கள் கண்காணித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indian government help Sri Lanka government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->