இந்தோனேசிய மக்களை அலறவிட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Indonesia earthquake 5 Richter
இந்தோனேசியாவில் இன்று காலை 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோரப் பகுதியில் 362 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி ஆபத்து இல்லை என இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவியியல் நிறுவனம் தெரிவித்தது.
இருப்பினும் மக்கள் அச்சமடைந்து பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் சுனாமி பேரலை தாக்கியது.
இதில் 2.30லட்சம் பேர் உயிரிழந்தனர். இதன் 19 ஆவது நினைவு தினம் மூன்று நாட்களுக்கு முன்பு நிறைவடைந்த நிலையில் மீண்டும் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indonesia earthquake 5 Richter