இந்தோனேஷியா நிலச்சரிவு; 17 பேர் பலி; 08 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்..!
Indonesia landslide 17 dead 8 missing
இந்தோனேஷியாவில் ஜாவா நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 17 பேர் உயிரிழந்ததோடு, 08 பேர் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.
ஜாவா நகரின் மத்திய பகுதியில் உள்ள பெக்கலோங்கன் என்ற இடத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் காட்டாற்று வெள்ளம் வந்து நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக, அங்கிருந்த வீடுகல் மண்ணில் புதைந்துள்ளன. இதில் சிக்கியே 17 பேர் உயிரிழந்துள்லத்தோடு, 08 பேர் காணாமல் போயுள்ளனர்.
குறித்த நிலச்சரிவு காரணமாக அங்கிருந்த பாலம் ஒன்று நொறுங்கி விழுந்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதனை சரி செய்யும் முயற்சியில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு உள்ளனர்.
அங்கு வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா என தேடும் பணி நடந்து வருகிறது. இதனால், பலி எண்ணிக்கை பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது.
English Summary
Indonesia landslide 17 dead 8 missing