இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: சாம்பல் காடாக மாறிய கிராமங்கள்!
Indonesia Volcanic eruption
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பை தொடர்ந்து 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் மாயமாகியுள்ளனர்.
இந்தோனேசியா, மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள மராபி எரிமலை நேற்று சீற்றத்துடன் காணப்பட்டது. இது குறித்து மீட்பு படையின் தலைவர் தெரிவித்திருப்பதாவது, 'எரிமலை வெடித்த பகுதியில் இருந்து 26 பேர் வெளியேற்றப்படாமல் இருந்துள்ளனர்.
அவர்களின் 14 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 3 பேர் மட்டுமே உயிருடன் உள்ளனர். 11 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் மாயமாகியுள்ளனர்' என தெரிவித்துள்ளார்.
நேற்று ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அப்பகுதிகளில் அதிக அளவில் சாம்பல்கள் படிந்துள்ளன. சாலைகள் மற்றும் கார்களை குப்பைகள் மூடியுள்ளன.
கடந்த மாதம் 22ஆம் தேதி இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் தற்போது எரிமலை வெடிப்பில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indonesia Volcanic eruption