இங்கிலாந்தில் புதிய பிரதமரை நியமிப்பதற்கு காரணம் என்ன?  - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டில் ரிஷி சுனக் பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்து வருகிறது. தற்போது, இங்கிலாந்து பிரதமராக உள்ள லிஸ் டிரஸ் மீதான அதிருப்தி அதிகரித்துள்ளது. புதிய பிரதமராக உள்ள லிஸ் டிரஸ், கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். 

கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டதை அடுத்து கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. பிரதமரின் இந்தத்திட்டத்திற்கு சொந்த கட்சி எம்.பி.க்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல், நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். 

இந்நிலையில், இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து அதிரடியாக நீக்குவதற்கு பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டார். மேலும், புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து அவரை செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என்று தகவல்கள் வெளியாகின. பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கைகள், அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. 

இந்நிலையில், 'தி டைம்ஸ்' நிறுவனம் நடத்திய 'உங்கள் அரசு' கருத்துக்கணிப்பில், ஆளும்கட்சி ஆதரவாளர்களில் கிட்டத்தட்ட பாதி பேர், தலைமைத் தேர்தலில் கட்சி தவறான வேட்பாளரை தேர்ந்தெடுத்ததாக நம்புகின்றனர்.

இந்நிலையில், கட்சித் தலைவராகவும், பிரதமராகவும் ரிஷி சுனக் மற்றும் பென்னி மோர்டான்ட் துணை பிரதமராக நியமிக்கப்பட வேண்டும் என்ற முடிவை முன்னெடுப்பது குறித்து ஆளும்கட்சி எம்.பி.க்கள் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். 

ஆனால், சட்டரீதியாக 12 மாதங்கள் வரை லிஸ்டிரஸ் பதவியை விட்டு விலக்க முடியாது. எம்.பி.க்கள் சட்ட விதிகளை மாற்றுவதற்கு வாக்களித்து அவற்றை மாற்றினால், பிரதமரை மாற்ற 1 வருடம் வரை காத்திருக்க வேண்டாம். 

இதுகுறித்து, முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் விசுவாசிகள் தெரிவித்ததாவது, "இத்தகைய சதி நடவடிக்கை, 'ஜனநாயக விரோத செயல்'.
அரசாங்கம் என்பது 'பாட்டிலை சுழற்றிவிடும் விளையாட்டு அல்ல'. இத்தகைய நடவடிக்கை, பிரதமரை பதவி நீக்கம் செய்வது மட்டுமல்லாமல் ஜனநாயகத்தை கவிழ்க்க நடத்தப்பட்ட சதி என்றும் தெரிவித்தனர்.

மேலும், இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் தெரிவிக்கையில், "டிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, டிரஸை மாற்றுவது பற்றி யோசிப்பது அரசியல் ரீதியாகவும் பொருளாதார துறையிலும் பேரழிவு தரும் ஒரு மோசமான யோசனையாக இருக்கும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland Tax cut problam MLAs new presendent request


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->