இங்கிலாந்து || வரிக்குறைப்புத் திட்டங்களை திரும்ப பெற்ற இங்கிலாந்து அரசு.!   - Seithipunal
Seithipunal


இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் இருந்து வருகிறார். இவர் கடந்த மாதம் நாட்டில் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் சில திட்டங்களை வெளியிட்டார். இந்த வரிகுறைப்பு திட்டங்களை முழுமையாக திரும்பப் பெறுவதாக அந்நாட்டின் புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் அறிவித்தார்.

இந்நிலையில், கடந்த மாதம் கொண்டுவந்த மிகவும் சர்ச்சைக்குரிய 'மினி பட்ஜெட்டில்', நிறுவனங்களுக்கான வரி உயர்வு, அதிக வருவாய் உள்ளவர்களுக்கு 45 சதவீத வரிஉயர்வு போன்றவற்றை அரசு ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வரி குறைப்பை கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், இங்கிலாந்து நாட்டின் பொருளாதாரம் நிலைகுலைந்து, அமெரிக்கா டாலருக்கு நிகரான பவுண்ட்டின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்தது.

இதனிடையே, பிரதமரின் வரிக்குறைப்பு திட்டத்திற்கு அவரின் சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். இது பிரதமர் லிஸ் டிரசுக்கு மிகுந்த தலைவலியை ஏற்படுத்தியது. 

இதையடுத்து, இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சராக இருந்த குவாஸி குவார்டங்கை பதவியிலிருந்து நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி உத்தரவிட்டார். மேலும், இங்கிலாந்து நாட்டின் புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹன்ட் என்பவர் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில், பிரதமா் அறிவித்திருந்த அனைத்து வரிக்குறைப்புகளையும், புதிய நிதி அமைச்சர் ஜெர்மி ஹன்ட் முழுமையாக திரும்பப் பெற்றாா். இந்த  நடவடிக்கை, பிரதமர் லிஸ் டிரஸுக்கு பெரும் வீழ்ச்சியாக கருதப்படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ingland Tax cut schemes returned ingland government


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->