ரஷ்யா-உக்ரைன் போர் : இன்ஸ்டகிரம் சேவையை முடக்கிய ரஷ்ய அரசு.!
Instagram service stopped in Russia
ரஷ்யாவில் இன்ஸ்டகிரம் சேவையை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் தொடர்ந்து 17வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலைக் கண்டிக்கும் வகையில் ரஷ்ய ராணுவத்தினருக்கு எதிராக பதிவு செய்யப்படும் வன்முறைக் கருத்துக்களை அனுமதித்த இன்ஸ்டாகிராம் செயலியின் சேவையை முடக்குவதாக ரஷியா அறிவித்துள்ளது.
மார்ச் 14 ஆம் தேதி முதல் ரஷ்யாவின் சில பகுதிகளில் இந்த முடக்கம் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ரஷ்யா பேஸ்புக் சேவையை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
English Summary
Instagram service stopped in Russia