இந்து பிரதிநிதிகளை சந்தித்து தாக்குதல் குறித்து இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் பேச்சுவார்த்தை!
Interim President Muhammad Yunus talks with Hindu representatives about the attack
வங்காளதேச இடைக்கால தலைவர் முகமது யூனுஸ் இந்து பிரதிநிதிகளை சந்தித்து தாக்குதல்களை நிறுத்துமாறு பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேசத்தில் இந்துக்கள் மற்றும் இதர சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் அந்நாட்டு இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் முகமது யூனுஸ் தீவிரமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்து மாணவர்கள் மற்றும் பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேச்சுவார்த்தையின் போது தற்போது நடைபெறும் வன்முறை சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்து இந்து சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
பங்களாதேஷில் உள்ள இந்து மற்றும் இதர சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக 205 தாக்குதல் சமூக நடைபெற்று உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் அந்நாட்டின் இடைக்கால அரசு வெளியிட்டுள்ள அதிகாரபூர்வமான அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை மதங்களுக்கு எதிராக சில பகுதிகளில் அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகிறது மிகவும் கவலை அளிக்கிறது.
முன்னதாக வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உதவ வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க வாய் இந்தியர்கள் தானேதர், ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அமெரிக்கா வெளியுறை துறை செயலாளர் ஆண்டனி கடிதம் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Interim President Muhammad Yunus talks with Hindu representatives about the attack