சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்! அமெரிக்க வெளியுறவு துறை எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


சவுதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணை வளம் பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் செயல்பட்டு வரும் ஆராம்கோ நிறுவனத்தின் இரண்டு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமண் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இதன் பின்னலையில் ஈரான் இருப்பதாக சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க குற்றம் சுமத்தின. இதன் காரணமாக ஈரான்-சவுதி இடையே பதற்றம் நீடித்து வருகிறது.

இதனால் பேச்சுவார்த்தை மூலம் சமாதானம் ஏற்படுத்த இரு நாடுகளும் முடிவு செய்து பேச்சுவார்த்தையை தொடங்கின. இந்த பேச்சுவார்த்தை தொடங்கிய ஒரு வருடத்துக்கு மேலாகியும் முடிவு எட்டப்படாததால் மீண்டும் ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. 

அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் "சவுதி அரேபியாவில் உள்ள இருசக்தி உற்பத்தி மையங்களின் மீது ஈரான் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. எங்கள் நலனையும் பிராந்தியத்தில் உள்ள எங்கள் நட்பு நாடுகளையும் பாதுகாக்க எத்தகைய நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம்.

தற்பொழுது நட்பு நாடுகளின் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு அதிகரிக்க வேண்டிய சூழல் இல்லை. எனினும் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து கவலை கொண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் உளவுத்துறையின் தகவல்களை பகிர்ந்து கொண்டதால் ஈரான் மீது உடனடி தாக்குதலுக்கு தயாராகி வருவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran plans to attack Saudi Arabia


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->