ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்: கைதானவர்களுக்கு மன்னிப்பு - ஈரான் மதத் தலைவர்
Iran religious leader says Amnesty for those arrested in anti hijab protests
ஈரானில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாக ஈரான் மதத்தலைவர் தெரிவித்துள்ளார்.
ஈரானில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஜாப் சரியாக அணியவில்லை என்று மாஷா அமினி(22) என்ற இளம் பெண்ணை போலீசார் கைது செய்து தாக்கியதில் மாஷா உயிரிழந்தார். இந்த சம்பவத்தை கண்டித்து ஈரான் முழுவதும் பெண்கள் தங்களது தலைமுடியை வெட்டியும் ஹிஜாப்களை எரித்தும் போராட்டங்களில் ஈடுபட்டனர். பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஹிஜாப் எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்தது. இதில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈரான் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.
மேலும் இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 20,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பலருக்கு தூக்கு தண்டனையும் ஈரான் அரசு அறிவித்தது. மேலும் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 10 ஆயிரம் பேருக்கு மன்னிப்பு வழங்க இருப்பதாகவும், இந்த மன்னிப்பு நிபந்தனைகளுடன் வழங்கப்படும் என்று ஈரான் மது தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
English Summary
Iran religious leader says Amnesty for those arrested in anti hijab protests