ஹிஜாப் போராட்டத்தின் எதிரொலி.! ஐநா பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கம்..! - Seithipunal
Seithipunal


ஐநாவின் பெண்கள் அமைப்பிலிருந்து ஈரானை நீக்கும் தீர்மானத்தை அமெரிக்கா கடந்த புதன்கிழமை கொண்டு வந்தது. அந்த தீர்மானத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 29 நாடுகளும் எதிராக எட்டு நாடுகளும் வாக்களித்தான. பதினாறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

ஐ.நா சபையில் நடந்த வாக்கெடுப்பின் முடிவில் ஈரானுக்கு எதிராக அமெரிக்க கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து ஐ.நா பெண்கள் அமைப்பிலிருந்து ஈரான் நீக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இத்தகைய செயலை ஈரான் முற்றிலும் நிராகரித்துள்ளது.

இதுகுறித்து பேசிய ஈரான் தூதரர் அமீர் சையத் ஜலீல் "ஈரான் மக்கள் மீதான நீண்ட கால விரோதப் போக்கை கருத்தில் கொண்டு ஈரானுக்கு எதிராக அமெரிக்கா இது போன்ற சட்டவிரோத நடவடிக்கை எடுப்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையை ஐநா சபை செயல்படுத்தினால் ஒருமைப்பாட்டிற்கு மிகவும் ஆபத்தாக அமைந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iran removed from UN Women Organization


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->