திமுக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? - கொந்தளிக்கும் திமுக அமைச்சர்!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்து வருவதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடுமையாக குற்றம் சாட்டி இருந்தார்.

தென்காசியில் நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவிக்கையில், "மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகள் கிலோ கணக்கில் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் பறிமுதல் செய்கிறார்கள்.

ஆனால், தமிழ்நாடு போலீசார் கஞ்சாவை தவிர மற்ற போதைப் பொருட்களில் ஒரு கிராம் கூட பறிமுதல் செய்வதில்லை. ஏனைய போதை பொருட்களை தமிழக போலீசார் கைப்பற்றவில்லை.

தமிழகத்தில் மத்திய அரசு ஏஜென்சிகள் மட்டுமே கஞ்சா அல்லாத பிற போதை பொருட்களை அதிக அளவில் கைப்பற்றுகின்றன. தமிழக காவல்துறையால் ஒரு கிராம் அளவு கூட கஞ்சா தவிர்த்த பிற ரசாயன போதை பொருட்களை பிடித்ததாக தகவல்களே இல்லை" என்று ஆளுநர் விமர்சித்து பேசி இருந்தார்.

இந்த நிலையில், ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்து சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். இதுகுறித்த அவரின் பேட்டியில், "ஆளுநர் மாளிகைக்குள்ளும், வெளியேவும் அரசியல் பேசுவதையும். அவதூறுகளை அள்ளி வீசுவதையும் தனது பொழுதுபோக்காக வைத்திருக்கிறார் ஆளுநர்.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகுதான் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்துப்பட்டுள்ளன. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த ஆளுநர், திமுக அரசின் நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா?" என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Ragupathy reply to Governor RN Ravi TN Police Ganja Drugs 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->