சினிமா என் பேஷன்!... கவர்ச்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்?...பிரியா பவானி சங்கர் OPEN TALK! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ம் ஆண்டு வெளியான "மேயாத மான்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 'கடைக்குட்டி சிங்கம், திருச்சிற்றம்பலம், மாபியா, களத்தில் சந்திப்போம், யானை,  மான்ஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான "இந்தியன் 2" திரைப்படத்தில் பிரியா பவானி சங்கரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் நடித்த படங்களில் சில படங்கள் தோல்வியடைந்ததால் அதற்குக் காரணம் இவர்தான் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர்.

இதையடுத்து டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் வெற்றி பெற்றதால் அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

சமீபத்தில், நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை பிரியா பவானி சங்கர், சினிமாவில் என் உடலை விற்பனைப் பொருளாக விற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும்,  திரும்பிப் பார்க்கும்போது தவறான விசயத்தைக் கொடுத்துவிட்டோமோ என நினைக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும், எதிர்மறைக் கதாபாத்திரம் வந்தாலும் மறுக்காமல் நடிக்கத் தயார் என்று கூறிய அவர்,இறுதியில் இது சினிமா, அவ்வளவுதான் என்றும், பேஷன் என்ற பெயரில் கவர்ச்சியாக உடலைக் காட்டக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cinema is my passion I will do anything for glamour priya bhavani shankar open talk


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->