பூமிக்கு அடியில் நவீன 'ஏவுகணை நகரம்'; வீடியோ வெளியிட்டு மேற்குலக நாடுகளை எச்சரிக்கும் ஈரான்..!
Iran warns Western countries by releasing video of underground missile city
ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தலுக்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது.
தனது வலிமையை நிரூபிக்கும் விதமாக ஈரான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, ஈரான் அரசு தங்கள் ராணுவ பலத்தை வெளிக்காட்டும் 85 வினாடிகள் கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளது.
அதில், ஆயிரக்கணக்கான நவீன ரக ஏவுகணைகளை பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சுரங்கத்தில் ஈரான் ராணுவம் சேமித்து வைத்துள்ளது. இந்த 'ஏவுகணை நகரம்' தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இன்று தொடங்கி அடுத்த 02 ஆண்டுகளுக்கு, வாரத்திற்கு ஒரு ஏவுகணை நகரை உலகிற்கு அறிமுகப்படுத்துவோம் என ஈரான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் மத்திய கிழக்கை ஆட்டிப்படைக்க நினைக்கும் மேற்கு நாடுகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Iran warns Western countries by releasing video of underground missile city