வச்ச குறி தப்பாது! ஹிஸ்புல்லா தலைவரை ஏவுகணை வீசி முடித்த இஸ்ரேல்! - Seithipunal
Seithipunal


லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரை கொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த வாரம் முதல் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. முதல்கட்டமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்தும் பேஜர்கள், வாக்கி டாக்கி சாதனங்கள் வெடிக்கவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதில், இரு குழந்தைகள் உட்பட 37 பேர் பலியானதுடன், சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் உட்பட  700 க்கும் மேற்பட்டோர் பலியானதுடன், லெபனான் மக்கள் போர் பதற்றத்தால் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து உள்ளனர்.

இந்நிலையில், நேற்று லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலக பகுதிகளில் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. 

இதில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா (64 வயது) உள்ளிட்டோர் உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே, கடந்த 2006 ஆம் ஆண்டு நஸ்ரல்லா உயிரிழந்ததாக அறிவித்த அடுத்த சில நாட்களிலேயே நஸ்ரல்லா உயிருடன் பொதுவெளியில் தோன்றியது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel Attack lebanon Hezbollah death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->