இந்திய கட்டுமான தொழிலாளர்களை அழைக்கும் இஸ்ரேல்.!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் ஹமாஸ் போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத் துறையில் நிலவும் கடும் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்தியாவிலிருந்து ஆட்களைத் தேர்வு செய்யக் இஸ்ரேல் நாட்டு குழுக்கள் இந்தியாவுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளன. மேற்குக் கரை மற்றும் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீன தொழிலாளர்கள் பெருமளவில் இஸ்ரேலில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர். போரின் காரணமாக அவர்களின் வேலைக்கான அனுமதி திரும்ப பெறப்பட்டது. 

சென்ற வாரம் இஸ்ரேல் நாட்டு தேர்வுக் குழு வந்து சென்ற வாரம் இந்தியா வந்து சென்ற நிலையில் உயரதிகாரிகள் மட்டத்திலான குழுவினர் அடுத்த வாரம் இந்திய வரவுள்ளனர். இதுக்குறித்து இஸ்ரேலிய கட்டுமான கூட்டமைப்பின் தலைவர் ஷே பாஸ்னர் கூறுகையில் டெல்லி மற்றும் சென்னையில் டிசம்பர் 27ம் தேதி  முதல் கட்டுமான பணிகளுக்காக ஆட்களைத் தேர்வு செய்யவுள்ளோம். முதல் கட்டமாக 10 ஆயிரம் தொழிலாளர்கள் கட்டுமான பணிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். பின்னர் தொழிலாளர்களின் மேம்பாட்டைப் பொறுத்து 30 ஆயிரம் தொழிலாளர்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த தேர்வுப் பணி 15 நாள்களுக்குத் தொடரும்" எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel invites Indian construction workers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->