லெபனானில் கோரத்தாண்டவம் ஆடும் இஸ்ரேல்!...தரை வழித்தாக்குதலுக்கு 55 பேர் பலி!
Israel playing hypocrisy in Lebanon 55 people died in the ground attack
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வந்தனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்ட நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.
தொடர்ந்து லெபனான் தலைநகர் பெரூட் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ஏவுகணை, ராக்கெட் பிரிவு தலைவரான இப்ராகிம் குவாப்சி கொல்லபட்டுள்ளார்.
இந்தசூழலில் நேற்று முன்தினம் லெபனான் முழுவதும் நடத்தப்பட்ட வான்தாக்குதல்களில் 97 பேர் பலியானதாகவும், 172 பேர் படுகாயம் அடைந்ததாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இஸ்ரேலின் இடைவிடாத வான்வழி தாக்குதல்களில் லெபனானின் பல்வேறு நகரங்கள் சீர் குலைந்துள்ள நிலையில், நேற்று லெபனான் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 55 பேர் கொல்லப்பட்டுள்ளதாவும், 156 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
English Summary
Israel playing hypocrisy in Lebanon 55 people died in the ground attack