குண்டு மழை பொழியும் இஸ்ரேல்!....சிரியாவை நோக்கி படையெடுக்கும் லெபனான் மக்கள்!
Israel raining bombs Lebanese people invading Syria
இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை தாக்கி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையிடையே யாரும் எதிர்பாராத வகையில் லெபனானில் பயன்பாட்டில் உள்ள பேஜர்கள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் இஸ்ரேல் இருக்கலாம் என கருதப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 5 நாட்களில் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிரியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று முன்தினம் நள்ளிரவில் லெபனான் எல்லைக்கு அருகே உள்ள சிரியாவின் காபர் யாபூஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ராணுவ வீரர்கள் பலியானதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாக சிரியா ராணுவம் தெரிவித்துள்ளது. லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 700-ஐ தாண்டியுள்ளது.
English Summary
Israel raining bombs Lebanese people invading Syria