விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த ஜேம்ஸ் திவார் நினைவு தினம்!.
James Dewars death anniversary
விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த திரு.ஜேம்ஸ் திவார் அவர்கள் நினைவு தினம்!.
வாக்கும் பிளாஸ்க்கை (vacuum flask) கண்டுபிடித்த ஜேம்ஸ் திவார் 1842ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள கின்கார்டைன் எனும் கிராமத்தில் பிறந்தார்.
இவர் 1897ல் இரட்டைசுவர் கண்ணாடி குடுவையில், வெற்றிடத்தோடு, மேலும் சில மாறுதல்களை செய்த போது, குளிர் நிலையில் மட்டுமல்ல, வெப்ப நிலையிலும் பொருட்களை பாதுகாக்க முடியும் என்பதை கண்டறிந்தார்.
வெற்றிடத்தின் வழியாக வெப்பம் கதிராக வெளியேறிவிட முடியும் என்பதால், குடுவையின் உட்புறம், வெள்ளி முலாம் பூசி, அதில் சிறிதளவு வெப்பமும் வெளியேற வாய்ப்பின்றி தடுத்தார் திவார். பிறகு, கார்டைட் என்ற வெடிப்பொருளை கண்டுபிடித்தார்.

இரட்டை சுவர் பாத்திர வடிவமைப்பை கண்ணாடி குடுவையாக ஏற்படுத்தி, பலவித வாயுக்களை அந்த இரண்டு சுவருக்கும் இடைப்பட்ட இடைவெளியில் அடைத்து வைத்து உள்ளிருக்கும் திரவத்தின் குளிர், வெப்பம் மாறா தன்மையை சோதனை செய்தார்.
கிட்டதட்ட உலகின் எல்லா நாடுகளிலும் பிரபலமான, விஞ்ஞான உலகமே பார்த்து வியந்த ஜேம்ஸ் திவார், தனது 80வது வயதில் 1923 மார்ச் 27 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
James Dewars death anniversary