அமெரிக்காவில் முடிவுக்கு வந்த கொரோனா அவசர நிலை..!
Joe biden announce to end corona national emergency in america
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்றால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் ஊரடங்கு மற்றும் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற முறைகளை பின்பற்றி வருகின்றன. இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்த தேசிய சுகாதார அவசர நிலை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்பு அரசாணையில் அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டு கொரோனா அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து அமெரிக்கா அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளாக போடப்பட்டு வந்த இலவச தடுப்பூசிகள் நிறுத்தப்படுவதாகவும், தேவையற்ற பரிசோதனைகளை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் விமான நிலையங்களில் வழக்கம்போல் நடைபெறும் சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், தேசிய அவசர நிலையால் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், கட்டுப்பாடுகளை நீக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
English Summary
Joe biden announce to end corona national emergency in america