பறவைகளை தத்தெடுப்போம்..சுற்றுச்சூழலை பாதுகாப்போம்..தேசிய பறவைகள் தினத்தை கொண்டாடுவோம்!. - Seithipunal
Seithipunal


சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 அன்று தேசிய பறவைகள் தினத்தை கொண்டாடிவருகின்றனர்.

தேசிய பறவைகள் தினம் முதன்முதலில் அமெரிக்காவில் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5 ஆம் தேதி இந்த நாள் கடைபிடிக்கப்படுகிறது. பறவைகள் இனம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாகவும், அனைத்து வகையான பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை இந்த நாள் நோக்கமாக கொண்டுள்ளதால் தேசிய பறவைகள் தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. பறவைகளின் உயிர்வாழ்வும் நல்வாழ்வும், இயற்கையையும் அவற்றின் வாழ்விடத்தையும் மனிதர்களாகிய நாம் எவ்வாறு பாதுகாக்கிறோம் என்பதைப் பொறுத்தது. பறவைகளைப் பாதுகாப்பது, வளா்ப்பது, வளா்ப்போருக்கு உாிய ஆலோசனைகள் வழங்குதல் போன்றவை இந்நாளின் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.

இயற்கையின் மிக அழகான படைப்புகளில் பறவைகளும் ஒன்று. சில சமயங்களில் அவை பாா்ப்பதற்கு மிகவும் அழகாகவும், வண்ணமயமாகவும் காட்சி அளிக்கும். ஆனால், இதையெல்லாம் தாண்டி அவை இந்த பூமியின் சுற்றுச்சூழல் அமைப்பின் முக்கிய காரணிகளாகவும் உள்ளன. சங்ககால இலக்கியங்கள் தொடங்கி இன்றைய புறா பந்தயங்கள் வரை பறவைகள் மனிதர்களோடு உறவாடிக்கொண்டிருக்கும் ஒரு ஜீவன். 

தேசிய பறவை தினத்தை கொண்டாடுவதில் ஒரு பறவையை தத்தெடுப்பது ஒரு முக்கிய அம்சமாகும். பெரும்பாலான பறவை பிரியர்கள் தேசிய பறவை தினத்தன்று பறவைகளை தத்தெடுப்பதாக அட்லாண்டா ஜர்னல்-கான்ஸ்டிடியூஷன் கூறுகிறது.

பறவைகளை தத்தெடுப்போம்..சுற்றுச்சூழலை பாதுகாப்போம்..தேசிய பறவைகள் தினத்தை கொண்டாடுவோம்!.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lets adopt birds Lets protect the environment Lets celebrate National Bird Day


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->