லிதுவேனியா-லாட்வியா செல்லும் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு ஐரோப்பிய நாடான லிதுவேனியாவை மையமாக கொண்டு இங்கும் ஆம்பர் கிரிட் நிறுவனம் இரண்டு குழாய்கள் மூலம் லாட்வியா நாட்டிற்கு எரிவாயு விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில் லிதுவேனியாவின் பனேவெஸிஸ் பகுதி அருகே எரிவாயு கொண்டு செல்லும் குழாய் ஒன்று எதிர்பாராத விதமாக வெடித்து தீப்பிடித்துள்ளது.

சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதையடுத்து உடனடியாக எரிவாயு வினியோகம் நிறுத்தப்பட்டது. மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் தீ முற்றிலும் அணைக்கப்பட்டதை உறுதி செய்த பின்னரே சேதமடையாமல் இருக்கும் மற்றொரு குழாயின் மூலம் எரிவாயு வினியோகம் செய்யப்பட்டது.

இதையடுத்து சேதமடைந்த மற்றொரு குழாயை சரிசெய்து, அதன் மூலம் எரிவாயு விநியோகம் செய்வதற்கு தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆம்பர் கிரிட் நிறுவனத்தின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் எரிவாயு குழாய்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு எரிவாயு குழாய்களும் உக்ரைன் மற்றும் ரஷ்ய எல்லைக்கு அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lithuania Latvia gas pipeline exploded and caught fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->