லண்டனில் சேலை உடுத்தி கொண்டு ஊர்வலமாக சென்ற இந்திய வம்சாவளி பெண்கள்! ஆச்சர்யத்தில் மக்கள்! - Seithipunal
Seithipunal


லண்டனில் தேசிய கைத்தறி தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7ஆம் தேதி, கைத்தறி நெசவாளர்களை நினைவு கூர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது. 

பிரதமர் மோடி அறிவித்ததன் படி கடந்த 2015 ஆம் ஆண்டு தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் தலைநகரம் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி பெண்கள் 700 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தேசிய கைத்தறி தினத்தை கொண்டாடினர்.

பல மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் பல வண்ணங்களில் சேலைகளை அணிந்து தங்கள் பாரம்பரிய பிரபலமான டிரபல்கர் சதுக்கத்தில் இருந்து பார்லிமென்ட் சதுக்கம் வரை ஊர்வலமாக சென்றனர். 

இந்த நிகழ்ச்சியை டாக்டர் தீப்தி ஜெயின் ஏற்பாடு செய்திருந்தார். இந்திய வம்சாவளி பெண்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஆடல் பாடலுடன் சென்றனர். அவர்களை பார்த்த லண்டன் நகர மக்கள் மிகவும் ஆச்சரியமடைந்தனர். 

இவர்கள் ஊர்வலம் சென்ற சாலையில் ஒருவர் கிட்டார் இசைக்கருவி வாசித்துக் கொண்டிருந்தார். அங்கு சிறிது நேரம் 700 பெண்களும் சேர்ந்து அவரது இசை கேட்டு நடனம் ஆடினர். அதனைப் பார்த்து பலரும் வியப்படைந்தனர். 

இந்த ஊர்வலத்தில் 700 பெண்களும் 'காஷ்மீர் மெயின் கன்னியாகுமரி' என்ற பாலிவுட் பாடலை பாடியபடி நடனம் ஆடிக்கொண்டு சென்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

இது குறித்து குஜராத்தை சேர்ந்த சுலேகா தேவி தெரிவிக்கையில், 'நாங்கள் இன்னும் கூட இந்திய கலாச்சாரத்துடன் வாழ்கிறோம். இந்தியாவில் உள்ள அனைத்து நெசவாளர்களையும் ஊக்குவிக்க விரும்புகிறோம்' என்றார். 

இதனை அடுத்து மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ரின்னா தத்தா என்ற பெண் தெரிவிக்கையில், 'இப்போது எங்கள் உறவினர்கள் இந்தியாவில் ஜீன்ஸ் அணிய தொடங்கியுள்ளனர். இந்த சேலையை அடுத்த தலைமுறை பயன்படுத்த மாட்டார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது' என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

London Indian origin womens wearing sarees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->