நோய் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி பிறந்த தினம்.!!
louis pasteur birthday 2021
லூயி பாஸ்டர் :
நோய் கிருமிகள் பற்றிய ஆராய்ச்சிகளின் மூலம் மனித குல நன்மைக்காகப் பாடுபட்ட பிரான்ஸ் விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1822ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி பிரான்ஸில் பிறந்தார்.
இவர் 1856ஆம் ஆண்டு தன்னுடைய நண்பரான ஒயின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய ஓர் ஆராய்ச்சி மேற்கொண்டார். ஒயினை புளிக்கச்செய்வது ஒருவகை பாக்டீரியா கிருமி என்பதைக் கண்டறிந்தார்.
தற்போது பால் மற்றும் உணவுப் பொருள் பதப்படுத்தும் நிலையங்களில் இந்த தொழில்நுட்பமே பயன்படுத்தப்படுகிறது. இது அவரது பெயரால் 'பாஸ்ச்சரைசேஷன்" என்று அழைக்கப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, மனித உடலில் நுண்ணுயிரிகள் புகுவதை தடுக்கும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உயிர்க்கொல்லி என்று கருதப்பட்ட காசநோய்க்கும் மருந்து கிடைத்தது. மேலும் கால்நடைகளுக்கு வரும் கோமாரி நோய்க்கும் மருந்தை கண்டறிந்தார்.
ரேபிஸ் நோய் பற்றி ஆராய்ந்து பல சோதனைகளை மேற்கொண்டு அதற்கான தடுப்பு மருந்தையும் கண்டறிந்தார். இவரது அடிப்படை கோட்பாடுகளைப் பயன்படுத்தி ஜன்னி, போலியோ போன்றவற்றுக்கும் மருந்து கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.
இவர் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். விண்ணில் உள்ள சில கோள்கள் மற்றும் நிலவிலுள்ள பள்ளங்களுக்கும் இவர் பெயர் வைக்கப்பட்டுள்ளது. தன் வாழ்நாள் இறுதிவரை மனித குல நன்மைக்காக உழைத்த விஞ்ஞானி லூயி பாஸ்டர் 1895ஆம் ஆண்டு மறைந்தார்.
English Summary
louis pasteur birthday 2021