போட்டோ எடுக்க மறுத்த மனைவி - ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூரம்..!
man attack wife for wife refused take photo in hawaii
ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றான ஹவாயைச் சேர்ந்தவர் கெர்ஹாட் கோனிக். மயக்க மருந்து நிபுணரான இவரது மனைவி ஏரியல் கோனிக். இவர் அணுசக்தி பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் விடுமுறையில் சுற்றுலாவுக்காக ஓஹூ தீவுக்கு சென்றுள்ளனர்.
அப்போது கெர்ஹாட் தனது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார். அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கெர்ஹாட், தனது மனைவியை அடித்தும், பாறாங்கல்லால் தாக்கியும் கொடூரமாக துன்புறுத்தியுள்ளார். இதை நேரில் பார்த்த இரண்டு பேர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அந்தத் தகவலின் படி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், முகம் மற்றும் தலையில் படுகாயமடைந்த ஏரியல் கோனிக்கை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மருத்துவராக உள்ள கெர்ஹாட் கோனிக்கை மருத்துவமனை நிர்வாகம் இடைநீக்கம் செய்தது. மேலும், அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போட்டோ எடுக்க மறுத்த மனைவியை கணவர் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man attack wife for wife refused take photo in hawaii