வீடியோ கால் மூலம் பண மோசடி - நண்பரின் உருவம் போல் இருந்ததால் ஏமாற்றம்.! - Seithipunal
Seithipunal


வீடியோ கால் மூலம் பண மோசடி - நண்பரின் உருவம் போல் இருந்ததால் ஏமாற்றம்.!

அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்கு வாட்ஸ் அப்-ல் தெரியாத எண்ணில் இருந்து வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த வீடியோ காலில் அவருடன் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த முன்னாள் நண்பரின் உருவம் தெரிந்தது. 

அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினர் ஒருவருக்கு உதவ வேண்டியுள்ளதால் ரூ.40,000 கூகுள் பே மூலம் அனுப்புமாறு தெரிவித்துள்ளார். இதனை உண்மை என்று நம்பிய ராதாகிருஷ்ணன் அவர் கூறிய எண்ணுக்கு ரூ.40,000 அனுப்பினார். 

இதேபோல், சில நாட்கள் கழித்து மீண்டும் அதே உருவத்தில் வீடியோ அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில், பேசிய நபர் மேலும் ரூ.30,000 அனுப்பும் படி வேண்டுகோள் விடுத்தார். இதனால் சந்தேகமடைந்த ராதாகிருஷ்ணன் சைபர் குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்கள் மற்றும் குரலில் மோசடி நபர்கள் இறங்கியுள்ளது தெரிய வந்தது.

இதேபோன்ற சம்பவம் இந்தியாவில் மட்டுமல்லாது, சீனாவிலும் கடந்த மே மாதம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நண்பரின் உருவத்துடன் கூடிய வீடியோ கால் மூலம் 4.3 மில்லியன் யுவான் பணம் மோசடி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man lost money on whatsapp caller in kerala


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->