சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்க முடிவு - முதலமைச்சர் ஸ்டாலின்.!
memorial statue of singapoore ex prime minister in mannarkudi CM stalin speach
சிங்கப்பூர் முன்னாள் பிரதமருக்கு மன்னார்குடியில் நினைவுச் சின்னம் அமைக்க முடிவு - முதலமைச்சர் ஸ்டாலின்.!
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிங்கப்பூரில் தமிழ் அமைப்புகளின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, சிங்கப்பூரின் உள்துறை சட்ட அமைச்சர் கா.சண்முகம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நிறைவுறையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சிங்கப்பூரின் தந்தை லிகுவான் யூ அவர்களால் தான் தமிழர்களுக்கும் தமிழுக்கும் உயர்வடைந்துள்ளது. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையை கேட்ட லிகுவான் யூ அவர்கள் அண்ணாவை தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். மேலும், தனது அலுவலகத்திற்கு அண்ணாவை அழைத்து விருந்து கொடுத்தார்.
ஆகவே, லிகுவான் யூ அவர்களுக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னமும் நூலகமும் எழுப்ப முடிவு செய்துள்ளோம். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள். அதனால், இந்தச் சிலை தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய உள்ளது. ஆகவே, லிகுவான் யூ பெயரில் சிலையும் மன்னார்குடியில் அமையும் என்று நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் பேசினார்.
English Summary
memorial statue of singapoore ex prime minister in mannarkudi CM stalin speach