மத்திய கிழக்கில் போர் பதற்றம் - இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயார் நிலையில் ஈரான்..! - Seithipunal
Seithipunal



மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. எந்த நேரத்திலும் ஈரான் , இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று தகவல் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த ஜூலை 31ம் தேதி ஈரான் நாட்டின் தலைநகர் தெக்ரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே வெடிகுண்டு வைத்துப் படுகொலை செய்யப் பட்டார். இந்தப் படுகொலையை செய்தது இஸ்ரேல் தான் என்று ஹமாஸ் அமைப்பும், ஈரானும் கருதுகின்றன. 

இதையடுத்து ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி இஸ்ரேலைப் பழி வாங்குவோம் என்று எச்சரித்துள்ளார். மேலும் கடந்த ஜூலை 30ம் தேதி ஈரான் ஆதரவு லெபனான் நாட்டின் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தலைவர் புவாட் ஷுகர் இஸ்ரேல் ராணுவத்தின் ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தார். 

இதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பும் இஸ்ரேலைப் பழி வாங்குவோம் என்று எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய கிழக்கு பகுதிகளில் போர் பதற்றம் நிலவுகிறது. இதனிடையே ஹிஸ்புல்லா அமைப்பு ஏற்கனவே இஸ்ரேலின் குடியிருப்பு பகுதிகளின் மீது தாக்குதலை ஆரம்பித்து விட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக அமெரிக்க உளவுத்துறையும் ஆகஸ்ட் 5 அல்லது அடுத்த சில நாட்களில் இஸ்ரேல் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்ட் 12ம் தேதி முக்கிய மத நிகழ்வு அனுசரிக்கப் படவுள்ள நிலையில் அன்றைய தினம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று இஸ்ரேல் உளவுத்துறையும் எச்சரித்துள்ளது. இதையடுத்து இஸ்ரேல் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Middle East War Iran is Readu to Attack Israel At Any Time


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->