கிரிக்கெட் ஜாம்பவான் கோலி கையெழுத்திட்ட மட்டை : ஆஸ்தி., பிரதமருக்கு வழங்கிய அமைச்சர் ஜெய்சங்கர்..!  - Seithipunal
Seithipunal


ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று கான்பெரா பகுதியில் உள்ள போர் நினைவு சின்னத்தை பார்வையிட சென்றிருந்தார். 

அப்போது, ஆஸ்திரேலியாவின் துணை பிரதமரும் ராணுவ அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ், ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அங்கு இருவரும் பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். 

இதையடுத்து, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், விராட் கோலி ஆட்டோகிராப் போட்ட மட்டையை ரிச்சர்ட் மார்லெஸுக்கு வழங்கினார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரிச்சர்ட் மார்லெஸ், 

"இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களை பல விஷயங்கள் இணைத்துள்ளது. அதில் கிரிக்கெட் மீதான எங்கள் காதலும் ஒன்று. கிரிக்கெட் ஜாம்பவான் கோலி கையொப்பமிட்ட மட்டையை பரிசளித்து ஜெய்சங்கர் என்னை ஆச்சரியப்படுத்தினார்" என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister jaisangar cricket bat presented to austrelia president


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->