ஏவுகணை தாக்குதல்...உக்ரைனுக்கு அமெரிக்கா எச்சரிக்கை! - Seithipunal
Seithipunal


உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

உக்ரைன்- ரஷியா இடையிலான போர் ஆயிரம் நாட்களை கடந்துள்ளது. ரஷியாவுக்கு உக்ரைனால் ஈடுகொடுக்க முடியாது. ஆனால் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவி வழங்கியதால் உக்ரைன் ரஷியாவுக்கு எதிரான போரிட்டு வருகிறது.போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

நெடுந்தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா ஒப்புதல் கொடுத்தது.இதனைத்தொடர்ந்த உக்ரைன் ரஷியா மீது தாக்குதல் நடத்தியது. இதை ரஷியா வெற்றிகரமாக முறியடித்தது. அதேவேளையில் ரஷியா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கண்டம்விட்டு கண்டம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ரஷியா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன குற்றம்சாட்டியது.

ஆனால், நாங்கள் ஒரேஷ்னிக் என்ற புதிய ஏவுகணையை சோதனை செய்தோம். இந்த ஏவுகணை உக்ரைன் பகுதியை தாக்கியதன் மூலம் சோதனை வெற்றி பெற்றது என புதின் அறிவித்தார்.

இந்த நிலையில் உளவுத்துறை மதிப்பீட்டின்படி மீண்டும் உக்ரைன் மீது ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

இதற்கிடையே உக்ரைன் போரில் கேம் சேஞ்சராக ஒரேஷ்னிக் இருப்பதைவிட, அமெரிக்காவை மிரட்டும் முயற்சியாகவே இது பார்க்கப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் பார்க்கிறார்கள்.

ரஷியாவிடம் ஒருசில ஏவுகணைகள் மட்டுமே இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்த மற்ற ஏவுகணைகளை விட சிறிய வகை மட்டுமே கொண்டுள்ளனர் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Missile attack U.S. warns Ukraine


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->