ஜெலன்ஸ்கி நம்பிக்கை வார்த்தை!!! அமெரிக்காவுடனான உறவை சரி செய்ய முடியும்....
Zelensky word of hope We can repair relations with America
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேசிய டிரம்ப், வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பேச்சுவார்த்தை கடுமையாக முடிந்தது.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி:
இதைத்தொடர்ந்து ஜெலன்ஸ்கி, டிரம்ப் ஆதரவு மீடியாவிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, " அமெரிக்கா மற்றும் டிரம்ப் உடனான உறவை சரி செய்வதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. இருநாட்டு உறவு என்பது இரு அதிபர்களுக்கும் மேலானது. ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவின் உதவி என்பது பெரிய அளவிலும், ராணுவ ரீதியிலும் தேவைப்படுகிறது. அமெரிக்கா ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது " எனத் தெரிவித்திருந்தார்.
English Summary
Zelensky word of hope We can repair relations with America