மியான்மர் : சுதந்திர தினத்தை முன்னிட்டு 7,012 கைதிகளுக்கு பொது மன்னிப்பு.! - Seithipunal
Seithipunal


மியான்மரின் இராணுவ அரசாங்கம் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி 7,012 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது.

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயகக்கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி 2021 பிப்ரவரி 1 அந்நாட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.  

இந்நிலையில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் மியான்மரில் 75வது ஆண்டு சுதந்திரதின விழாவை முன்னிட்டு 7,012 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக மியான்மர் ராணுவ ஆட்சியாளர் மின் ஆங் லியாங் நேற்று அறிவித்தார். இதையடுத்து இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படும் என்றும் சுதந்திர தின உரையின் போது உறுதியளித்துள்ளார்.

மேலும் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தையும், புதிய தண்டனையையும் சேர்த்து அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Myanmar junta to free 7012 prisoners under amnesty


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->