இனி மனித சிறுநீரை குடிக்கலாம்...! புதிய சாதனை படைத்த நாசா! - Seithipunal
Seithipunal


விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சியை மேற்கொண்ட நாசா அதில் வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் தண்ணீருக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவை சுற்றுச் சூழல் கட்டுப்பாடு மற்றும் லைஃப் சப்போர்ட் சிஸ்டம் முறைப்படி பெறப்பட்டு வருகிறது.

விண்வெளி வீரர்களின் சிறுநீர் மற்றும் வியர்வை ஆகியவற்றை மறுசுழற்சி மற்றும் சுத்திகரிப்பு செய்து அதில் இருந்து தண்ணீரை பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

இந்த முயற்ச்சியில் இதற்கு முன்னர் 94 விழுக்காடு சுத்தமான தண்ணீர் பெற்று வந்த நிலையில் தற்போது 98 விழுக்காடு சுத்தமான தண்ணீர் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த முயற்சி முழுமையாக வெற்றி பெற்றால் வரும் காலங்களில் விண்வெளி வீரர்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்து, பெரிய அளவில் வெற்றி பெறலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA made a new record by turning urine & sweat into drinking water


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->