2030ஆம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம் - நாசா - Seithipunal
Seithipunal


'ஆர்டெமிஸ்' திட்டத்தின் மூலம் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஓரியன் விண்கலம் சோதனை முயற்சியாக மனித மாதிரிகளுடன் எஸ்.எல்.எஸ். ராக்கெட் மூலம் கடந்த வாரம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. 

இந்நிலையில் ஓரியன் விண்கலம் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர் ஹோவர்ட் ஹூ பிரபல தனியார் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்தார். 

அதில் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிலவில் வாழலாம் என்றும், நாம் மக்களை நிலவுக்கு அனுப்பப் போகிறோம், அவர்கள் நிலவில் வாழ்ந்து ஆராய்ச்சி செய்ய போகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது நாசாவுக்கு வரலாற்று நாள். அதுமட்டுமல்ல விண்வெளி ஆராய்ச்சிகளை விரும்பும் அனைவருக்கும் இது சிறந்த நாள். நாம் நிலவுக்கு திரும்பிச் செல்கிறோம். அதற்காகவே ஆர்டெமிஸ் என்ற நிலையான திட்டத்தை நோக்கி செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA says Humans may live on the moon by 2030


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->