நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிர் இஸ்ரேல் தாக்குதலுக்கு பலி!
Nasrallah son in law hasan jaber al qazir was killed in an israel attack
கடந்த வாரம் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் நஸ்ரல்லாவுடன் இருந்த ஈரானின் மூத்த ராணுவ தளபதி அப்பாஸ் என்பவரும் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இஸ்ரேலை பழிவாங்குவோம் என்று ஈரான் அரசு பகிரங்கமாக அறிவித்தது உலக நாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
தொடர்ந்து இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசியது. 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஒரே சமயத்தில் வீசி ஈரான் நடத்திய இந்த திடீர் தாக்குதலால் இஸ்ரேல் முழுவதும் பெரும் பதற்றமான சூழல் உருவாகியது.
இஸ்ரேலில் உள்ள நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து இருந்தார்.
முன்னதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் 27-ந்தேதி தாக்குதல் நடத்தி கொன்றது. இதனால், மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலையில்,சிரியா நாட்டின் டமாஸ்கஸ் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், நஸ்ரல்லாவின் மருமகன் ஹசன் ஜாபர் அல்-காசிர் கொல்லப்பட்டுள்ளதாக, ஹிஸ்புல்லா அமைப்பின் நெருங்கிய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளது.
English Summary
Nasrallah son in law hasan jaber al qazir was killed in an israel attack