பாகிஸ்தானில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு!....பஞ்சாப்பில் 144 தடை உத்தரவு அமல்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தனது பதவிக் காலத்தில் கிடைத்த பரிசுப் பொருட்களை கருவூலத்தில் சேர்க்காமல் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் விற்பனை செய்து சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இம்ரான்கானுக்கும், அவரது மனைவிக்கும்  14 ஆண்டு சிறை தண்டனையை இஸ்லாமாபாத் நீதிமன்றம்  நிறுத்தி வைத்தது. இதையடுத்து, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில்  இம்ரான் கான் மேல்முறையீடு செய்த நிலையில், இது தொடர்பான விசாரணை கடந்த 20-ம் தேதி நடைபெற்றது.

அப்போது, இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், வேறு ஒரு வழக்கிற்காக ஒரு மணி நேரத்திலேயே, ராவல்பிண்டி போலீசார் அவரை கைது செய்தனர். இந்த நிலையில் அவரை விடுதலை செய்ய கோரி இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் நாடு முழுவதும்  போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால், தலைநகர் இஸ்லாமாபாத்துடன் இணைக்கும் நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு உள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nationwide protest announced in pakistan 144 prohibitory order implemented in punjab


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->