பூமியை நோக்கி வரும் புதிய ஆபத்து.! நாசா வெளியிட்ட பகீர் தகவல்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் செயல்பட்டு வரும்   உலக விண்வெளி நிறுவனமான நாசா விண்வெளியை ஆராய்ந்து அவ்வப்போது மக்களுக்கு அதனை பற்றிய செய்திகளை பகிர்ந்து வருகிறது. உலகிலேயே விண்வெளி ஆராய்ச்சியில் நாசா தான் முதன்மையான நிறுவனம். இது பல செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்பி பால்வெளி  மண்டலங்கள் மற்றும் கோள்களைப் பற்றிய ஆய்வுகளையும் விண்வெளியில் நடக்கும் நகர்வுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

இதன் ஆராய்ச்சியில், தற்போது 2046 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி நமது பூமிக்கு புதிய ஆபத்து ஒன்றிருப்பதாக கண்டுபிடித்துள்ளது. அந்த ஆய்வுகளின் படி இன்னும் 23 ஆண்டுகள் கழித்து காதலர் தினத்தன்று நம் பூமியின் மீது சிறு கோள் ஒன்று மோதவுள்ளதாக  தெரிவித்திருக்கிறது நாசா.

இந்த ஆய்வின்படி 2023 டி டபிள்யூ என்று பெயரிடப்பட்டுள்ள சிறிய கோளை ஆய்வு செய்து வரும் நாசா அந்தக் கோள் 2046 ஆம் ஆண்டு பூமியை தாக்கும் அபாயமிருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த சிறிய கோளின் நகரும் கல்லை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் அறிவித்திருக்கிறது.

மேலும், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள நாசா அந்தக் கோள் பூமியை தாக்குவதற்கான அபாயம் குறைந்த அளவில்தான் இருப்பதாக தெரிவித்துள்ளது. இது குறித்து தெளிவாக செய்தியை குறிப்பிட்டுள்ள நாசா புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் போது அவற்றின் நிச்சயமற்ற தன்மையை குறைப்பதற்கும் எதிர்காலத்தில் அவற்றின் சுற்றுப்பாதைகளை போதுமான அளவில் கண்காணிப்பதற்கும் நிறைய தரவுகள் தேவைப்படுவதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new danger for our planet on 2046 feb 14 what is the view of nasa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->