சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபராக நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸ் தேர்வு.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடான சைப்ரஸ் நாட்டில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், முன்னாள் வெளியுறவு அமைச்சரான நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸை எதிர்த்து ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிஸ் போட்டியிட்டார்.

அதன் படி, இந்த தேர்தலில் 72.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதில், 51.9 சதவீத வாக்குகளை நிகோஸ் கிறிஸ்டோடவுலைட்ஸும், மீதமுள்ள 48.1 சதவீத வாக்குகளை ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிசும் பெற்றுள்ளார்.

இந்தத் தேர்தலில் சைப்ரசில் விலைவாசி உயர்வு, முறையற்ற புலம்பெயர்வு, சைப்ரசில் கிரேக்கம் பேச கூடிய தெற்கு பகுதி மற்றும் துருக்கியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வடக்கு பகுதியில் அரை நூற்றாண்டாக காணப்படும் பிரிவினையும் உள்ளிட்டவை எதிரொலித்து உள்ளது. 

இதைத் தொடர்ந்து, அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிகோலஸ் சைப்ரஸ் நாட்டின் புதிய அதிபராக பொறுப்பேற்றார். இந்த நிலையில், தேர்தலில் சிறிய வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த ஆண்டிரியாஸ் மேவ்ராய்யன்னிஸ் செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது அவர், "சைப்ரஸ் நாடு விரும்பிய மாற்றங்களை செய்ய முடியாததற்காக எனது வருத்தத்தையும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிகோசுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nicos choosan next new president in cyprus country


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->