ஈகுவடார் : மீன்பிடித் துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒன்பது பேர் பலி.! - Seithipunal
Seithipunal


ஈகுவடார் : மீன்பிடித் துறைமுகத்தில் துப்பாக்கிச் சூடு - ஒன்பது பேர் பலி.!

ஈகுவடார் நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள எஸ்மரால்டாஸ் மாகாணத்தில் மீன்பிடி துறைமுகம் ஒன்றுள்ளது. இந்த நிலையில், இந்த துறைமுகம் நேற்று முன்தினம் வழக்கம்போல் இயங்கி கொண்டிருந்தது. 

அப்போது முப்பது பேரை கொண்ட கும்பல் ஒன்று கையில் துப்பாக்கிகளுடன் இருசக்கர வாகனங்களில் வந்து இறங்கியுள்ளனர். இதையடுத்து அவர்கள் திடீரென துறைமுகத்தில் இருந்த வணிகர்கள் மற்றும் ஊழியர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் உயிர் பயத்தில் அலறி அடித்தபடி சிதறியடுத்து ஓடினர். இருப்பினும் அந்த கும்பல் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியுள்ளனர். அதன் பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்துச் சென்றது. 

இந்த தாக்குதலில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களையும், காயமடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அதன் பின்னர் போலீசார் இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், இந்த தாக்குதலுக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. ஈகுவடார் நாட்டில் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது ஆகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nine peoples died in fishing port equatar for gun shoot


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->